அபுதாபியில் உள்ள பராகாக் அணுசக்தி மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் சூழலில், தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், டிரோன் நிலையத்தின் வெளிப்புற சுவரில் மோதியதால் அங்கு தீப்பற்றி எரிந்ததாக தெரிவித்தனர். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரோனை யார் ஏவியது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





