சென்னையின் ஆயிரம்விளக்கு தொகுதியில் அவ்வை சண்முகம் சாலை, எஸ்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும், பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாகவும் கூறினார். ஒரு மாதத்திற்குள் தற்காலிக சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், விளையாட்டு மைதானங்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும், பொதுநலச் சங்கங்களை இணைத்து மக்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக எப்போது எதை செய்ய வேண்டும் என்பது முதல்வருக்கு நன்றாக தெரியும் என அவர் குறிப்பிட்டார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவகாரத்தில் இரு தரப்பினரும் மனுக்கள் அளித்துள்ளதால், உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.





