தவெக அரசில் துறைகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் 9 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான துறைகள் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் முதல்வர் முன்னிலையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து ஆதவ், ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதே நேரத்தில், முதல்வரின் தனிச் செயலாளர்களான செந்தில் குமார், லட்சுமிபிரியா, அண்ணாதுரை ஆகியோர் கவனிக்கும் துறைகளும் அறிவிக்கப்பட்டன. மேலும், கூடுதல் செயலாளர் விஷ்ணுவுக்கு வணிகவரி, பதிவுத்துறை, சுற்றுலா, கலாசாரம், சிறு-குறு-நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், இளைஞர் நலம், விளையாட்டு, தொழிலாளர் நலம், திட்டம் மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டன.