ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படும் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை ஜாமின் வழங்கியது.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூலம் பதிவு செய்யப்பட்டது. குப்வாராவைச் சேர்ந்த குற்றச்சாட்டுக்குள்ளானவர் 2020 ஜூன் மாதம் முதல் காவலில் இருந்து வருவதாகவும், ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. உபா (UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் ஜாமினே விதியாகவும், சிறை விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்று அமர்வு கருத்து தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து சையத் இப்திகார் அன்ட்ராபிக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.





