சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பின் சார்பில் பேசினார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அதில் எடுக்கப்படும் முடிவை “தலைவணங்கி ஏற்றுக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார்.

இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் தோல்வியை சந்தித்ததாகவும், 2019 முதல் தொடர்ச்சியான தோல்விகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் கட்சியின் ஓட்டு வங்கி சரிவை நோக்கி செல்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், சில கட்சிகள் கூட்டணிக்கு முன்வந்தபோதும் இபிஎஸ் அதை உதாசீனப்படுத்தியதாகவும், தேமுதிக, புதிய தமிழகம் போன்றவர்களை அரவணைக்காமல் சென்றதாகவும் அவர் கூறினார். இபிஎஸ் நியமித்த புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களின் ஒரே குறிக்கோள் என கூறிய சண்முகம், பொதுக்குழுவில் பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நிர்வாகிகளை மிரட்டுவது கட்சி வளர்ச்சிக்கு உதவாது என்றும், கட்சியின் விதிகளை இபிஎஸ் மீறுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.