தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை விரிவாக ஆய்வு செய்ய பாஜ உயர் மட்ட குழு கூட்டம் கோவையில் மே 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாஜ குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை; மேலும் கூட்டணியும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தோல்விக்கான காரணங்களை கட்சி தலைமையகம் ஆராய திட்டமிட்டுள்ளது.
பிரசாரம் எவ்வாறு நடந்தது, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு எந்த அளவில் இருந்தது, தலைவர்கள் மேற்கொண்ட பிரசாரத்தின் தாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
இந்த கூட்டத்திற்கு கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகிக்கிறார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.





