சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்க 19 பேரை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை பரிந்துரைக்கும் அதிகாரம் கொலீஜியம் அமைப்புக்கு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் 25 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்தச் சூழலில், 19 பேரின் பெயர்கள் நியமன பரிந்துரையாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்டவர்கள்: பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதண்டாயுதம், நடராஜன் ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், எல்லப்பன் மனோகரன், கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன், ரஜ்னிஷ் பதியில், அப்பாதுரை (எ) கந்தவேல் அப்பாதுரை, ராமசாமி அனிதா, சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், என். குணசேகரன்.