சென்னையில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் திங்கள்கிழமை பல இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரின் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடும் ஒரு பைனான்சியருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அந்த பைனான்சியரின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அயனாவரம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை தொடரும் நிலையில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.