குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயணிகள் விமானத்திற்குள் மின்விளக்கும் ஏசியும் இல்லாமல் சுமார் அரை மணி நேரம் சிரமப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.40 மணிக்கு 160 பயணிகளுடன் டில்லி நோக்கி புறப்பட தயாராக இருந்த விமானத்தில், அனைவரும் ஏறி அமர்ந்த பின்னர் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் கேபினில் மின்விளக்குகள் அணைந்ததுடன், ஏசியும் செயல்படவில்லை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இருளிலும் காற்றோட்டமின்றியும் அமர வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. ஆனால் இதன் காரணமாக விமானம் சுமார் 1 மணி 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.





