பின்னணி
சந்தனக் கடத்தல்காரன் வீரப்பன் 2004ல் சிறப்பு அதிரடிப்படையால் (STF) கொல்லப்பட்டார். இதையடுத்து, அதிரடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய 900க்கும் மேற்பட்டோருக்கு ஒரு படிநிலை விரைவு பதவி உயர்வு வழங்க அரசு முடிவு செய்தது.
16 காவலர்களின் மனுக்கள்
அந்த முடிவின் அடிப்படையில் 16 காவலர்கள் எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால், பதவி உயர்வு வழங்கப்பட்ட போது அவர்கள் தற்காலிக அடிப்படையில் பணியில் இருந்ததால், 2009ல் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்த நிலையில், தனி நீதிபதி அவற்றை தள்ளுபடி செய்தார்.
அமர்வு நீதிபதிகள் முன் மேல்முறையீடு
இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். 2004 அரசாணை அடிப்படையில் மாநில அரசு தவறாக பதவி உயர்வு வழங்கியதாக அமர்வு குறிப்பிட்டது.
நீதிமன்ற உத்தரவு
அதே நேரத்தில், உயிரை பணயம் வைத்து STF நடவடிக்கையில் மனுதாரர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு, அவர்கள் எஸ்.ஐ.க்களாக பணியாற்றிய காலத்தில் பதவி உயர்வு நாள் முதல் பெற்ற அனைத்து பலன்களையும் மாநில அரசு திரும்பப் பெறக் கூடாது என அமர்வு உத்தரவிட்டது.





