சென்னை: ‘விஜய் அலை’ இருந்தபோதும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் பா.ஜ. தனது ஓட்டு சதவீதத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக பா.ஜ. தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ. 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த தொகுதிகளில் பதிவான மொத்த ஓட்டு 2.50 கோடி; இதில் பா.ஜ. பெற்றது 49.18 லட்சம் ஓட்டுகள்; சராசரி 19.62%.
இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. 27 தொகுதிகளிலும், தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் ஆறு தொகுதிகளிலும் போட்டியிட்டதாகவும், மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார். அந்த தொகுதிகளில் பதிவான 66.03 லட்சம் ஓட்டுகளில் பா.ஜ.க்கு 14.67 லட்சம் ஓட்டுகள் கிடைத்ததாகவும், சராசரி 22.22% எனவும் தெரிவித்தார்.
மேலும், 2021 சட்டசபை தேர்தலில் 48% ஓட்டுகளை பெற்ற தி.மு.க.க்கு இந்த தேர்தலில் 24% ஆக குறைந்துள்ளதாகவும், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டு சதவீதமும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு அடுத்ததாக அதிக ஓட்டு சதவீதம் பெற்ற கட்சி பா.ஜ. எனவும், ‘விஜய் அலையிலும்’ பா.ஜ. தனது ஓட்டுகளை தக்க வைத்ததோடு அதிகரித்துள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார்.





