ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றார். தலைநகர் ரோமில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கிடையேயான உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சந்திப்பின்போது, மெலோனிக்கு ‘மெலோடி’ என்ற பெயருடைய சாக்லேட்டை மோடி பரிசாக வழங்கினார். தன் பெயருடன் ஒத்த பெயர் இருப்பதை குறிப்பிட்டு மெலோனி செல்பி வீடியோ எடுத்தபோது, இரு தலைவர்களும் கலகலப்பாக சிரித்தனர்.

அந்த வீடியோவை மெலோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, பரிசுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நகைச்சுவை தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.