தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) தலைவர் சரத் பவார், அரசியல் வேறுபாடுகளை விட நாட்டுநலமே முதன்மை என வலியுறுத்தி, வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை காக்க பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று பாராட்டினார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசியல் கருத்து வேறுபாடுகள் பல இருக்கலாம்; ஆனால் நாட்டின் மரியாதை தொடர்பான விஷயங்களில் அவற்றை முன்னிறுத்தக் கூடாது என்றார். நாட்டின் நலனை பாதுகாக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இந்திரா காந்தி, பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மத்திய ஆட்சியில் இருந்த காலங்களில் நாட்டின் எதிர்காலம் மற்றும் பெருமைக்காக பணியாற்றினர் என அவர் நினைவூட்டினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஐந்து நாடுகளுக்கு சென்றுள்ளதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்; அதற்கு பாஜக பதிலடி கொடுத்திருந்தது. இந்த பின்னணியில் சரத் பவாரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.





