ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

வடமாம்பாக்கம் கிராம வி.ஏ.ஓ.வாக பணியாற்றிய தணிகாசலம் (59) என்பவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (45) 1,402 சதுர அடி நிலத்திற்கான பட்டாவை ஆன்லைன் வழியாக பெற சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் அது ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்காத வினோத், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.15,000-ஐ வழங்கியபோது, தணிகாசலத்தை கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.