‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் தொடர்பான பதிப்புரிமை வழக்கில், இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மே 21 அன்று நீதிபதிகள் ஹரி சங்கர், ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து, பதிப்புரிமைச் சட்டத்தின் படி இசையமைப்பாளர் ஒரு பாடலின் இசை அமைப்புக்கே உரிமை கோர முடியும்; முழுப் பாடலுக்கும் உரிமை கோர முடியாது என்று தெரிவித்தது.

மேலும், பதிப்புரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட “இசைப் படைப்பு” என்பதில் பாடல்வரிகள் அல்லது ஒலிப்பதிவு அடங்காது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த சட்ட விளக்கத்தின் அடிப்படையில், முழுப் பாடலுக்கான உரிமை கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.