திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் நிர்மல் குமார் தரிசனத்திற்கு சென்ற போது என்ன நடந்தது என்பது குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரின் தரிசனத்திற்காக மதிய நேர கோவில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
மூலஸ்தானத்தில் அமைச்சர் தரிசனம் செய்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து விமர்சனம் அதிகரித்தது. அமைச்சருக்காக நடை சாத்தும் நேரம் தாமதப்படுத்தப்பட்டு ஆகம விதிகள் மீறப்பட்டதாக கோவில் நிர்வாகம் மீது பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
வேறு ஒரு வழக்கின் விசாரணை நேரத்தில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





