அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தற்போது த.வெ.க.வில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்பு அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மணியன் கூறியதாவது: வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா வெளியேறியபோது அ.தி.மு.க.வில் இணைவதற்கான முயற்சி இருந்தது. ஆனால், துணை பொதுச்செயலர் பதவியை கேட்டதாகவும், அது மறுக்கப்பட்டதால் பின்னர் த.வெ.க.வில் சேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அ.தி.மு.க. விவசாய அணி செயலரும் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாக கூறினார். மொத்தம் 78 மாவட்ட செயலர்களில் 75 பேரும், 81 தலைமை நிர்வாகிகளில் 60 பேரும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பழனிசாமி தலைமையில் விசுவாசத்துடன் செயல்படுவோம்; கட்சியை காப்பாற்ற அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் முழு ஆதரவு அளிப்போம் என 75 மாவட்ட செயலர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார். சிலர் வெளியூரில் இருப்பதும், சிலர் உடல்நலக் காரணங்களாலும் வர முடியவில்லை என கடிதம் அளித்ததாகவும், கட்சியின் 95 சதவீத நிர்வாகிகள் பழனிசாமி தலைமையில் உறுதியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சி.வி. சண்முகம் குறித்து விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி வழங்கிய பொறுப்புகள் மற்றும் பதவிகளை மறந்து, “அமைச்சர் பதவி சுகம்” காரணமாக கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். மாவட்டங்களின் தொகுதி வெற்றித் தரவுகளை மேற்கோள் காட்டி தனது விமர்சனத்தை அவர் முன்வைத்தார்.





