குழந்தைகளுக்கான ஆன்லைன் பாதுகாப்பு விதிகளை மீறியதாக, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உடைய சமூக ஊடக தளம் ‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.4.48 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்த விவகாரம் 2023-ல் ஆஸ்திரேலியாவின் ஆன்லைன் பாதுகாப்பு ஆணையம் (eSafety Commissioner) அப்போது ‘டுவிட்டர்’ என அழைக்கப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பிய வெளிப்படைத்தன்மை நோட்டீஸைத் தொடர்ந்து உருவானது. அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது.

பின்னர் நிறுவனம் வாங்கப்பட்டு ‘எக்ஸ்’ என பெயர் மாற்றப்பட்டதால், அந்த நோட்டீஸில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு கடமை இல்லை என நிறுவனம் வாதிட்டது.

ஆனால் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்காமல், நோட்டீஸுக்கு இணங்காததற்காக எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4.48 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.