சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் விஜய் வியாழக்கிழமை பேட்டரி காரில் சுற்றிப் பார்த்தார்.
தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வந்த அவர், பேட்டரி காரில் ஏறி வளாகத்திற்குள் உள்ள பழமையான செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தை பார்வையிட்டார். அங்கு உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கும் சென்று பார்த்தார்.
பார்வையிட்ட பகுதிகள் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர். இந்த சுற்றுப்பார்வை குறித்து தகவல் பரவியதும் தலைமைச் செயலக ஊழியர்கள் பலர் அங்கு திரண்டனர்; கோட்டை பகுதியில் பொதுமக்களும் அவரை காணக் கூடினர்.
இந்த பயணத்தில் முதல்வருடன் அவரது தனிப்பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் மட்டுமே சென்றனர். அமைச்சர்கள் யாரும் உடன் செல்லவில்லை.
கோட்டை வளாகத்தில் தமிழக அரசின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் தலைமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. கோட்டை காவல் நிலையம், உணவகம், தபால் நிலையம் உள்ளிட்ட வசதிகளும் அங்கு உள்ளன.





