மே 25 மற்றும் 26 தேதிகளில் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், வங்கிச்சேவைகள் நீண்ட நாட்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.

இதுகுறித்து எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனம் இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதற்காக முழு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்கள் பணத் தேவைகளுக்கு ஏடிஎம்கள் மற்றும் தானியங்கி டெபாசிட் இயந்திரங்களை பயன்படுத்தவும், உதவிக்காக சேவை மையங்களை அணுகவும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும் இணைய வங்கி, யோனோ (YONO), மொபைல் வங்கி, யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மே 23 நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது; மே 25 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனுடன் மே 25-26 வேலைநிறுத்தம் மற்றும் மே 27 பக்ரீத் விடுமுறை சேர்ந்து, மே 23 முதல் மே 27 வரை மொத்தம் ஐந்து நாட்கள் வங்கி செயல்பாடுகள் பாதிக்கக்கூடும்.