4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பி) உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் கையெழுத்திட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரவின்படி, செந்தில்குமாரி சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். டோங்ரே பிரவீன் உமேஷ் திருச்சி எஸ்பியாக பொறுப்பேற்கிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் எஸ்பியாக ஷியாமளாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி எஸ்பியாக அசோக் குமார் மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்பியாக அக்ஷய் அனில் அனில் வாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்பியாக லலித்குமார் பொறுப்பேற்கிறார்.

காவல் துறையின் நிர்வாக மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.