சென்னை: தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை அறிவித்தார்.

சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 10-ஆம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து புதன்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், விசிக அமைச்சரவையில் இடம் பெறுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், விசிக இடம்பெறும் என்று திருமாவளவன் உறுதிப்படுத்தினார். மேலும், விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக பதவியேற்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும், நாளை முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகானும், விசிகவின் வன்னியரசும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர் என்றும் அவர் கூறினார்.