சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படும் அநாகரிகமான, சர்ச்சைக்குரிய பதிவைத் தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலரும் எம்பியுமான ஆ.ராஜா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வி.சி.க. சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேலு குபேந்திரன், மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் மனு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் வெளியான பதிவுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.), கூட்டணி கட்சியாக குறிப்பிடப்பட்ட முஸ்லிம் லீக் மற்றும் தமிழகத்தை ஆளும் தமிழக வெற்றி கழகம் குறித்து இழிவாக பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பெண்மையை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் சமூகத்தில் கலவரம் ஏற்பட்டு அமைதி குலையச் செய்யும் உள்நோக்கிலும் அந்த பதிவு செய்யப்பட்டதாக கூறி, ஆ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது.





