இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 60 நாள் விசா இல்லா தங்கும் வசதியை தாய்லாந்து அரசு ரத்து செய்துள்ளதாக பாங்காக்கில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் 2024 ஜூலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி சில வெளிநாட்டவர்கள் சட்டவிரோத வியாபாரம், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, இந்தியர்கள் இனி விசா இல்லாமல் தாய்லாந்தில் நுழைய முடியாது. ‘விசா ஆன் அரைவல்’ அல்லது ஆன்லைன் மூலம் இ-விசாவுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.
இந்த புதிய நடைமுறை முழுமையாக அமலுக்கு வரும் வரை, ஏற்கனவே தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டவர்கள் பழைய விதிகளின்படி 60 நாட்கள் வரை தங்கலாம் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.





