புதுடில்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து டில்லி வந்த உடனேயே பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்கள் பயணத்துக்குப் பின் ஓய்வெடுப்பார் என எதிர்பார்த்த மூத்த அதிகாரிகள் இதைக் கண்டு வியந்ததாக கூறப்படுகிறது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நீடித்தது. மத்திய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பிரதமர் பேசினார்.
வழக்கமாக அமைச்சரவை கூட்டங்களில் சிற்றுண்டிகள் வழங்கப்படும் நிலையில், இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் டீ தவிர வேறு எதுவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சில அதிகாரிகள் இதை குறித்து பேசினதாக கூறப்பட்டதையடுத்து பின்னர் பிஸ்கட் வழங்கப்பட்டதாக தகவல். இரவு 9.30 மணியளவில் கூட்டம் முடிந்த நிலையில், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இரண்டு மாநிலங்களுக்கும் உதவ வேண்டும் என்றும் பிரதமர் கூறியதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.





