புதுடில்லி: குறுகிய காலத்துக்குள் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளை வழங்கும் இலக்குடன் ‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு முகாம் 2022ல் தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த முயற்சி, நாட்டின் பல மாநிலங்களில் இதுவரை 18 முறை நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த முகாம்கள் மூலம் மொத்தம் 12 லட்சம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 19வது ரோஜ்கர் மேளா டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்ற பிரதமர் மோடி, 51,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான தனது பயணங்களில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்றும், அவை ஒளிமயமான மற்றும் திறமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளன என்றும் கூறினார்.





