கோவைக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை தொடங்கினர்.
மருத்துவமனை தரப்பின் தகவலின்படி, அமைச்சருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் மருத்துவக் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறது.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை (மே 25) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





