தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கேரள முதல்வர் சதீசன் நேற்று காலை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.
காலை 7 மணியளவில் கோவிலுக்கு வந்த அவரை, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாக அதிகாரி அருண்குமார் முறைப்படி வரவேற்றனர்.
மூலவரை வழிபட்ட பின்னர், தன் எடைக்கு நிகராக வெண்ணெய் வழங்கும் ‘துலாபார’ நேர்த்திக்கடனை அவர் செலுத்தினார். இந்த வழிபாட்டிற்காக 71 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் சேர்ந்த சதீசன், முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக இக்கோவிலுக்கு வந்துள்ளார். தரிசனத்தை முடித்த பின், கேரள வருவாய் துறை அமைச்சர் அனில் குமார் மகன் திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.





