டெல்லியில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை “நான் மிகப்பெரிய ரசிகன்” எனப் புகழ்ந்தார்.
அமெரிக்காவின் 250வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
டிரம்ப் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசினார். இந்தியா அமெரிக்காவை “100%” நம்பலாம் என்றும், உதவி தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்து குறிப்பிட்ட அவர், இந்தியா பெற விரும்பும் பல விஷயங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்றும் தெரிவித்தார். இறுதியில், பிரதமர் மோடிக்கு தனது வணக்கத்தை தெரிவித்து, இந்த செய்தியையும் அவரிடம் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.





