அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பகுதியைச் சுற்றிவளைத்து விசாரணையைத் தொடங்கினர். உயிரிழந்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மேக்னாபென் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 10 ஆண்டுகளாக அந்த அங்காடியில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கணவர் உபேந்திரபாய் படேல், மகள் நக்ஷி மற்றும் மகன் ஸ்மித் உள்ளனர்.

அங்காடியில் நடந்த கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பின்னால் வேறு காரணம் உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்; தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.