கனடாவில் பட்டப்படிப்பு படித்து வந்த 22 வயது இந்திய மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சாத் பகுதியைச் சேர்ந்த விதி கல்பேஷ்பாய் மேஹானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவில் தங்கி பட்டப்படிப்பை தொடர்ந்த அவர், படிப்புடன் சேர்த்து பகுதிநேர வேலையும் செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நயாகரா பகுதியில் மே 15 அன்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக நபரை தீவிரமாகத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.





