ஊழலில் ஈடுபட்டால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும் என்று கட்சியினருக்கு அமைச்சர் ஆனந்த் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை புறநகரான பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அவர் பேசினார். லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்றும், ஊழலை எந்த காரணத்திற்கும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழல் நடந்தால் “அடுத்த விநாடியே” முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்றும், மக்களுக்கு சேவை செய்வதே கட்சியின் நோக்கம் என்றும் ஆனந்த் கூறினார்.

வரும் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அனைவரும் ஒற்றுமையாக இருந்து பெரிய வெற்றியை பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சியில் இணைவதாகவும், தொகுதி பிரச்னைகளை தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக செய்து தருவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கும் தவெகவில் உரிய மரியாதை வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.