டில்லி, பஞ்சாப், ஹரியானா, திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான புதிய மாநில தலைவர்களை பா.ஜ. தலைமை புதன்கிழமை அறிவித்தது.

இது தொடர்பாக தேசிய பொதுச் செயலர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத்திய இணை அமைச்சரும் லோக்சபா உறுப்பினருமான ஹர்ஷ் மல்ஹோத்ரா டில்லி பா.ஜ. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் தற்போது மாநில செயலராக உள்ள அர்ச்சனா குப்தா புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலத்தில், கேவல் சிங் தில்லான் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காங்கிரசில் இருந்த இவர், 2022ல் பா.ஜ.வில் இணைந்தார்.

திரிபுரா மாநில தலைவராக அபிஷேக் தேப்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வரும் என கட்சி தெரிவித்துள்ளது.