தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கர்நாடக மாநிலத்தின் கூர்க் (குடகு) மலைப்பகுதிக்கு ஓய்வுக்காக சென்றுள்ளார். அவர் ஜூன் 2-ம் தேதி வரை அங்கு தங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான தகவலின்படி, ஸ்டாலின் நேற்று தனி விமானத்தில் மைசூரு சென்றார். அவருடன் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேர் சென்றதாக கூறப்படுகிறது.

மைசூருவில் இருந்து அவர்கள் காரில் கூர்க் பகுதிக்கு பயணம் செய்தனர்.

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்று சில நாட்கள் தங்கியிருந்த ஸ்டாலின், தேர்தல் முடிவு தெரிந்த பின் திருமண நிகழ்ச்சிக்காக திருவாரூர் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றிருந்தார்.

இந்நிலையில், கூர்க் பயணத்தை முடித்து ஸ்டாலின் ஜூன் 2-ம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.