திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, முதல்வர் விஜய் ஜூன் 1ஆம் தேதி திருச்சி செல்ல உள்ளார்.

சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு, விஜய் தலைமையில் தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ளது. தேர்தலில் அவர் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

இதில் பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

தகவலின்படி, ஜூன் 1 அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.