இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பை அதிகரிக்கும் நோக்கில், வரும் ஜூன் 1 முதல் அக்டோபர் 30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு பொதுவாக 11% வரி விதிக்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு ஜவுளித் தொழிலில் மூலப்பொருள் தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகள் உருவானால், அந்த வரியை தற்காலிகமாக தள்ளுபடி செய்வது வழக்கமாக உள்ளது.

பருத்தி இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று ஜவுளி அமைப்புகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன. உள்நாட்டு பஞ்சு பற்றாக்குறையை சமாளிக்க இந்த வரி விலக்கு அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அந்த பின்னணியில், அறிவிக்கப்பட்ட காலக்கெடு வரை வரி ரத்து செய்யப்படுவதால், ஜவுளி ஆலைகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பருத்தி கிடைப்பில் நிவாரணம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.