கேரளாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்காக கொச்சி மண்டல என்ஐஏ குழு தமிழகத்திற்கு வந்து, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அகத்தாகுளத்தில் வெடிப்பணிகளில் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் தயாரிக்கும் ஒரு ஆலையிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.





