முறைகேடு தொடர்பான புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜாவை அரசு பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
கிருஷ்ணராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2024 நவம்பர் மாதத்தில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புகாரை முன்வைத்து சட்டத்துறை நடவடிக்கை எடுத்து இன்று அவரை பணியில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக போக்குவரத்துக் கழகங்களின் வழக்கறிஞராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியிருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.





