தமிழக அரசின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு முடிந்த பின்னர் துறைவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இதை கூறினார். ஆய்வு நிறைவடைந்ததும் துறைகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

மேலும், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளதாகவும், அங்கு செயல்படும் குவாரிகள் இதற்கு காரணமா என்பதை ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

முதல்வருடன் ஆலோசித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும், துறைவாரியாக அமைச்சர்கள் பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் துறைகளின் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.