மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்ட அறிவிப்புகளின்படி, உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

நியமிக்கப்பட்டவர்களில் மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்ரமணி மோகனா, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நகு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நியமனங்களால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்க உள்ள நீதிபதி மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.