அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், திருமணமான சில மணி நேரங்களிலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட டேவ் பிஜி, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தார். டாசன்வில்லில் உள்ள “தி ரிவியர்” என்ற இடத்தில் கடந்த மே 29 அன்று செவிலியராக பணியாற்றும் ஜெஸ்னியுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், தம்பதியினர் அட்லாண்டாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் டேவ் பிஜி மற்றும் ஹெலிகாப்டர் பைலட் உயிரிழந்தனர்; ஜெஸ்னி பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.
டேவின் தந்தை ஜார்ஜ் பிஜி கூறியதன்படி, மோசமான வானிலை மற்றும் பார்வைத் திறன் மிகக் குறைவாக இருப்பதை டேவ் பைலட்டிடம் சுட்டிக்காட்டி, இத்தகைய சூழலில் பறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.





