ஜூன் 2 (திங்கள்) அன்று தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 1) நீலகிரி முதல் கன்னியாகுமரி வரை உள்ள 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை பட்டியலில் உள்ள தூத்துக்குடி மட்டும் இன்று பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜூன் 3 மற்றும் 4 தேதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் 7 வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.