முடிவுகள் அறிவிப்பு

ஐஐடிகளில் இளநிலை சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் ஜூன் 1 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்வு விவரங்கள்

இந்த ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்தியது. மே 17 அன்று நடைபெற்ற தேர்வில் சுமார் 1.80 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தேர்ச்சி எண்ணிக்கை

மொத்தம் 56,880 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10,107 பேர் மாணவிகள்.

முதலிடங்கள்

டில்லி ஐஐடி மண்டலத்துக்குட்பட்டவரும் பீஹாரை சேர்ந்தவருமான சுபம் குமார், 360க்கு 330 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய முதலிடத்தை (AIR 1) பிடித்துள்ளார். டில்லி மண்டலத்தை சேர்ந்த கபிர் சில்லார் மற்றும் ஜடாயின் சஹார் முறையே 2 மற்றும் 3 இடங்களை பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் அரோஹி தேஷ்பாண்டே முதலிடம் பிடித்துள்ளார்.