தமிழகத்தில் காலியாக உள்ள ஒரே ராஜ்யசபா எம்பி இடத்திற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் தொடங்குகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி. சண்முகம், போட்டியிடுவதற்கு முன் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக இந்த இடம் காலியானது.
இந்த இடத்திற்கான வேட்புமனுக்கள் ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 9 அன்று நடைபெறும்; வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 11 ஆகும்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 18 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் அதே நாளில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 24 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.





