சனிக்கிழமை (மே 31) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அன்றைய அதிகபட்ச வெப்பமாக வேலூரில் 106°F பதிவானது.

அடுத்ததாக சென்னை மீனம்பாக்கம், திருச்சி மற்றும் திருத்தணி நகரங்களில் தலா 104°F பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, கரூர், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் 106°F-ஐ கடந்த வெப்பம் பதிவானதாகவும் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.