தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது அரசியல் பயணத்தில் புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

தகவலின்படி, டெல்லியில் பாஜ தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்து, விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். இதனால் அவரது அடுத்த நடவடிக்கை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

மேலும், இந்த விஷயத்தை தெரிவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது. விலகலுக்கான காரணங்கள் அல்லது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், பாஜ தலைமையிடம் ‘டைம்’ கேட்டதாகவும், அண்ணாமலை அடுத்த அரசியல் நகர்வுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.