சென்னை: தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைமையை சந்திப்பதற்காக நேற்று மாலை டில்லி புறப்பட்டுச் சென்றார்.
பா.ஜ.வில் தமக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகவும், தனியாக கட்சி தொடங்கலாம் எனவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் டில்லி மேலிடம் அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க, நேற்று மாலை 5 மணியளவில் சென்னையிலிருந்து விமானத்தில் டில்லி சென்றார்.
வழக்கமாக பா.ஜ. கொடி கட்டிய காரில் வருவது வழக்கம் என்றாலும், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவரது காரில் பா.ஜ. கொடி காணப்படவில்லை.
‘தனிக்கட்சி தொடங்க உள்ளீர்களா’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இரண்டு நாளில் அனைத்திற்கும் பதில் அளிக்கிறேன்,” என்று கூறி அவர் சென்றார்.





