தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். இது “வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற இலக்கை நனவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெலுங்கானா மாநில உருவாக்க தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மாநில மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானா மக்கள் படைப்பாற்றலும் வணிகத் திறமையும் கொண்டவர்கள் என அவர் பாராட்டினார்.

மேலும், துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் போராட்ட உணர்வின் அடையாளமாகத் திகழும் மகத்தான வரலாறும், புகழ்பெற்ற கலாசாரமும் மாநிலத்துக்கு உள்ளதாக அவர் கூறினார்.

மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உறுதியாக துணை நிற்கும் என்றும், மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியைப் பெற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்தார்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு 2014 ஜூன் 2 அன்று தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் முதல் முதல்வராக பதவியேற்றார்; தற்போது ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.