உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘ருத்ரா M-II’ எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையை, சுகோய் Su-30MKI போர் விமானம் மூலம் ஏவி டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை ஒடிசா சந்திப்பூர் ஏவுகணை சோதனை தளத்தில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

‘ருத்ரா M-II’ ஏவுகணை, நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை அதிகபட்சம் 300 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி, இந்தியாவின் துல்லிய தாக்குதல் திறனை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தற்சார்பை மேம்படுத்தும் முயற்சிகளிலும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

சோதனை வெற்றிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து, இதில் பணியாற்றிய டிஆர்டிஓ குழுவினரை பாராட்டினார்.