தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகள் சரியாக அமல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசர கால சூழ்நிலைகளில் கூடுதல் கவனத்துடன் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல்:
- ஆனந்த்: விழுப்புரம், கடலூர்
- ஆதவ்: சென்னை, திருவண்ணாமலை
- வெங்கடரமணன்: மயிலாடுதுறை
- குமார்: திருவள்ளூர்
- மரியவில்சன்: திருநெல்வேலி
- ராஜ்மோகன்: பெரம்பலூர்
- தென்னரசு: காஞ்சிபுரம்
- ரஞ்சித்குமார்: திருப்பத்தூர்
- சரத்குமார்: செங்கல்பட்டு
- வன்னி அரசு: கள்ளக்குறிச்சி
- காந்திராஜ்: ராணிப்பேட்டை
- ராஜ்குமார்: தர்மபுரி, அரியலூர்
- ஷாஜஹான்: நாகை
- வினோத்: தஞ்சாவூர்
- ரமேஷ்: திருச்சி
- விஜயலட்சுமி: கரூர்
- லோகேஷ்: நாமக்கல்
- அருண்ராஜ்: திருப்பூர்
- கமலி: நீலகிரி
- விஜய் பாலாஜி: வேலூர்
- செங்கோட்டையன்: ஈரோடு
- சம்பத் குமார்: கோவை
- நிர்மல் குமார்: மதுரை, தேனி
- முகமது பர்வேஸ்: புதுக்கோட்டை
- பிரபு: சிவகங்கை
- கீர்த்தனா: கிருஷ்ணகிரி
- ஜெகதீஸ்வரி: விருதுநகர்
- விஸ்வநாதன்: திருவாரூர்
- ஸ்ரீநாத்: தூத்துக்குடி
- மதன்ராஜா: ராமநாதபுரம்
- விஜய் தமிழன் பார்த்திபன்: சேலம்
- ராஜேஷ் குமார்: கன்னியாகுமரி
- ராஜிவ்: தென்காசி
- விக்னேஷ்: திண்டுக்கல்





